MS Dhoni : மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து வார்னரை வெளியேற்றிய – தோனி வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமை

Dhoni
- Advertisement -

நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் அணி வீரரான வார்னர் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 45 பந்துகளில் 57 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் சிங் வீசிய 14 ஆவது ஓவரில் விக்கெட் தோனியின் அபார மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஸ்டம்பிங் செய்த பின்னர் அம்பயரின் உதவியை நாடாத தோனி அவுட் என்று கூறி கைதூக்கி விக்கெட்டை கொண்டாடினார். வார்னரும் அம்பயரின் முடிவை எதிர்பார்க்காமல் அவுட் என்பதனை அறிந்து அதிர்ச்சியுடன் வெளியேறினார். இதுபோன்ற பல குயிக் ஸ்டம்பிங்கள் பலவற்றை செய்து இருந்தாலும் போட்டிக்கு தேவையான நேரத்தில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தியதால் தோனியின் இந்த ஸ்டம்பிங் விடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்தபடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Watson

பின்னர் ஆடிய சென்னை அணி துவக்க வீரரான வாட்சன் அதிரடி மூலம் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். ரெய்னா 38 ரன்களை அடித்தார். வாட்சன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement