தோனி எடுத்த திடீர் அதிரடி முடிவு. சென்னை அணிக்கு கைகொடுக்குமா ? – விவரம் இதோ

Dhoni-2
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 29 ஆவது லீக் போட்டி இன்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

srhvscsk

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை அடித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சன் ரைசர்ஸ் அணி 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று சற்றும் எதிர்பாராத வகையில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தோனி அடுத்த சில நொடிகளிலேயே அடுத்த முடிவை அதிரடியாக அறிவித்தார். அதாவது தொடக்க வீரராக வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் களம் இறங்கி வந்தனர். ஆனால் இன்றைய போட்டியின் சாம் கரன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் துவக்க வீரராக களமிறங்கினார்கள்.

curran

கொல்கத்தாவில் சுனில் நரேனை பவர் பிளேயில் அடிக்க விடுவது போல் சென்னை அணியும் அடிக்க வேண்டும் என்று தோனி யோசித்திருக்கலாம். அதே போன்று சாம் கரனும் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 21 பந்துகளில் 31 ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்றார்.

curran

ஏற்கனவே சென்னை அணியின் துவக்கம் மந்தமாக இருப்பதால் மிடில் ஆர்டரில் அழுத்தம் அதிகரிக்கிறது என்று தோனி கூறியிருந்தார். அதனை தவிர்ப்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும் இனி வரும் போட்டிகளில் இதே நடைமுறை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement