தோனியின் திட்டம் என்னனு தெரியாது. ஆனால் எப்படி பிராக்டீஸ் பண்றாரு தெரியுமா ? – ராஞ்சி அதிகாரி கூறிய விவரம் இதோ

Dhoni

ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பல மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் தற்போது இழுபறியில் நடக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 போட்டிகலும் ஷார்ஜா, துபாய், அபுதாபி போன்ற மூன்று மைதானங்களில் மட்டுமே நடக்க இருக்கிறது.

ipl

இதற்காக மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் துவங்க உள்ளது. மேலும் இதற்காக ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், டெக்னிக்கல் வேலையாட்கள் அனைவரும் துபாய் செல்ல உள்ளனர். அதற்கு இடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல் போன்ற அணி வீரர்கள் இந்தியாவிலேயே தங்களது பயிற்சியை துவக்கி விட்டார்கள்.

அதே போல் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது பயிற்சியை தொடங்கி விட்டதாக செய்திகள் வந்துள்ளது. சென்ற வருட உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட்டாகி வெளியேறியவர், அதன்பிறகு தற்போதுவரை களத்திற்கு திரும்பவில்லை. இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆட காத்திருந்தார். அப்போதுதான் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடியது.

அதன்பின்னர் தற்போது அனைத்து பிரச்சனைகளையும் கடந்து தோனி தற்போது ஐபிஎல் தொடருக்கு பயிற்சியை மீண்டும் துவக்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜார்கண்ட் விளையாட்டு அகாடமி அதிகாரி ஒருவர் கூறியதாவது.. தோனி கடந்த வாரம் எங்களது அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள வந்திருந்தார்.

- Advertisement -

Dhoni

உள் அரங்கில் இருக்கும் பந்துவீச்சு இயந்திரத்தின் உதவியுடன் பயிற்சி மேற்கொண்டார். கடந்த வார இறுதி நாட்களில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார் அந்த அதிகாரி. மேலும் அவரின் திட்டம் என்னவென்று எங்களுக்கு தெரியாது. மீண்டும் அவர் வருவாரா என்பதும் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.