சென்னை மைதானத்திலும் ரசிகருடன் ஓடி விளையாடிய தோனி – வைரல் வீடியோ

- Advertisement -

சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VK and MS

- Advertisement -

நேற்று மாலை துவங்கிய பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் மற்றும் மற்றும் அணியில் இடம்பெறாமல் இருக்கும் உள்ளூர் வீரர்களுக்கும் இடையே 20 ஓவர் பயிற்சி கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ராயுடு, ரெய்னா மற்றும் முரளி விஜய் போன்ற வீரர்கள் களமிறங்கினர்.

இந்த பயிற்சி போட்டிக்கு முன்பாக தோனியை காண ரசிகர் ஒருவர் மைதானத்தின் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்து தோனியை பார்க்க முயன்றார். வழக்கம் போல் ரசிகருடன் ஓடி பிடித்து விளையாடி கடைசியில் அந்த ரசிகருக்கு கைகொடுத்து வழி அனுப்பினார். இதோ அந்த வீடியோ :

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி இந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பாலாஜியின் டி-ஷர்ட்டை இழுத்தவாறு ஓடுகிறார். பாலாஜியும் புன்முறுவலோடு சிரித்துக்கொண்டே அந்த ரசிகரை பார்த்தபடி உள்ளார். இதுபோன்ற தோனி ரசிகரின் நிகழ்வு ஒன்றும் புதிதல்ல.

Advertisement