சி.எஸ்.கே அணி வீரர்களுடன் குறும்புத்தனமாக விளையாடிய தல தோனி – வைரல் வீடியோ

Bravo
- Advertisement -

சி.எஸ்.கே கேப்டனான தோனி பல ஆண்டுகளாக சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் என்ன செய்தாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது தோனி விளம்பரம் ஒன்றில் நடித்த போது சக வீரர்களுடன் சகஜமாய் குழந்தை போன்று விளையாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த வீடியோவில் தோனி பிராவோவின் மீது பந்துகளை அடித்து விளையாடுகிறார். மேலும், இந்த விளம்பரத்தில் தோனி, ரெய்னா, ஜாதவ், ஹர்பஜன் மற்றும் பிராவோ ஆகிய பலரும் நடித்துள்ளனர். இந்த விளம்பர படப்பிடிப்புக்கு பிறகு தோனி பிராவோவுடன் விளையாடினார். இதே போன்று ரெய்னா மற்றும் ஹர்பஜன் ஒருபுறம் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

கடந்த ஆண்டு வயதானவர்கள் அணி என்று கிண்டலடிக்கப்பட்ட சென்னை அணி அந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் வகையில் அனைத்து அணிகளையும் வென்று இறுதியில் 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்த ஆண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி திறம்பட விளையாடும் என்று நம்பலாம்.

VK and MS

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement