தோனி இனிமேல் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும். கிரிக்கெட் வேண்டாம் – வருத்தத்தில் ரசிகர்கள்

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி கடந்த உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. குறிப்பாக உலக கோப்பை தொடருக்குப் பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் பங்கேற்கவில்லை அதற்கு அடுத்து தற்போது நடந்து வரும் நடந்து வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

அதனால் விரைவில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தோனி ஓய்வு குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வமாக தகவல் எதையும் அறிவிக்கவில்லை. அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை வரை அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்த நிலையில் தற்போது மும்பையில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உடன் இணைந்து கால்பந்து போட்டியில் கலந்துகொண்டார். எதற்காக அந்த கால்பந்து போட்டி நடைபெற்றது என்று முழுத்தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும் “பிளேயிங் பார் ஹுமானிட்டி” என்ற வாசகம் பதித்தபடி தோனி உடையணிந்து விளையாடினார்.

தோனி எப்படி இருந்தாலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால் அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்றும் அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். கால்பந்து அவருக்கு பிடித்த விளையாட்டு என்பதால் இதற்காகவே ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும் என்றும் தோனியின் நேரம் முடிய போகிறது வருத்தமாக உள்ளது என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.