கோலியின் ஆட்டத்தை தடுக்க தோனி வகுத்த புது வியூகம் – விவரம் உள்ளே

Kohli
- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி கொண்டே வருகிறது.

VK and MS

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான சென்னை அணியில் இருந்து தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளாரான லுங்கி நெகிடி தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களாக பிராவோ மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் உள்ளனர். மேலும், வாட்சன் அவ்வோப்போது பந்து வீசவும் செய்வார்.

கோலி தற்சமயம் சிறந்த பார்மில் இருப்பதால் அவரை சமாளிக்க தோனி புதிய வியூகம் அமைத்துள்ளார். அதன்படி சென்னை அணி சுழற்பந்து வீச்சாளர்களை அவர் தயார் செய்து வருகிறார். சென்னை அணியில் ஹர்பஜன், கரண் சர்மா, ஜடேஜா, சாண்டனர் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.

Harbhajan

இவர்களில் இருவரை தேர்ந்தெடுக்கப்போகும் தோனி அவர்களை வைத்து கோலிக்கு அழுத்தம் கொடுக்க உள்ளார். மேலும், ஜாதவ் பகுதிநேர சுழற்பந்து வீசுவார் என்றும் தோனி முடிவெடுத்துள்ளார். மொத்தத்தில் பந்துவீச்சு பகுதியை முன்னேற்ற தோனி தற்சமயம் முடிவு செய்துள்ளார்.

Advertisement