போட்டி முடிந்து தமிழக வீரர் ஷாருக்கானை அழைத்து அமரவைத்து பேசிய தோனி – அப்படி என்ன சொன்னார் தெரியுமா ?

Shahrukh
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே குவித்தது. குறிப்பாக அந்த அணியின் டாப்-5 வீரர்கள் ராகுல், அகர்வால், கெயில், தீபக் ஹூடா, பூரான் ஆகியோர் மொத்தமாக 25 ரன்கள் மட்டுமே குவித்தனர். முதல் 6 ஓவர்களில் இவர்கள் 5 பேரும் ஆட்டம் இழந்ததால் ஒட்டுமொத்த பஞ்சாப் அணியின் பேட்டிங் யூனிட்டும் பவர் பிளே ஓவர்களிலேயே முடிவுக்கு வந்தது.

chahar 1

இந்நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்களை முழுவதுமாக பேட்டிங் செய்து முடிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் பவர் ஹிட்டராக 5 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரரான ஷாருக்கான் பஞ்சாப் அணிக்காக பேட்டிங் செய்ய ஆறாவது வீரராக களம் இறங்கினார். முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறியதால் இவர் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை இந்த போட்டியின் மூலம் அவர் சிறப்பாக வெளிப்படுத்தினார்.

- Advertisement -

தேவையான போது பந்துகளை அடித்து, நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுத்தும் அவர் சிறப்பாக விளையாடினார். ஒரு கட்டத்தில் 20 ஓவர்களை பஞ்சாப் அணி விளையாடுமா ? என்று நினைத்த நிலையில் இந்த 107 ரன்கள் வருமளவிற்கு டீசன்டான ஒரு ஆட்டத்தை ஷாருக்கான் மட்டுமே விளையாடினார். 36 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என 47 ரன்களை குவித்தார். மற்றபடி பஞ்சாப் அணியில் ஒருவர் கூட 15 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

shahrukh 2

தமிழக வீரரான ஷாருக்கானின் இந்த நேர்த்தியான ஆட்டம் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், நிபுணர்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் தனி ஒருவனாக விளையாடிய ஷாருக்கானின் ஆட்டம் பிடித்துப்போக போட்டி முடிந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஷாருக்கானை அழைத்து அவர் அருகில் அமர வைத்து தனியாக நீண்ட நேரம் பேசி உள்ளார். மேலும் இப்படி தோனி ஷாருக்கானை அழைத்து பேசியதற்கான காரணமும் சில இருக்கின்றன.

Shahrukh 1

அதன்படி உயிர் கிரிக்கெட்டுக்காக 2013ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ஷாருக்கான் தற்போது நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்து ஐபிஎல் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். தோனி அவருக்கு போட்டி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது எவ்வாறு பேட்டிங் பிடிக்க வேண்டும் என்பது குறித்தும், போட்டியை எவ்வாறு முடித்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், ஒரு பவர்ஹிட்டராக எந்த நேரத்தில் எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் பல அறிவுரைகளை அவர் ஷாருக்கானுக்கு வழங்கியுள்ளார்.

Advertisement