எனக்கு முன்னதாக ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை பேட்டிங் செய்யவைக்க இதுவே ரீசன் – தோனி வெளிப்படை

Dhoni
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.

csk-vs-mi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் வாட்சன் (4), முரளிவிஜய் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழழந்து வெளியேற 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பின்னர் விளையாடிய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் ராயுடு ஆகியோரின் அபார ஆட்டத்தால் சிறப்பான ரன்குவிப்பை வழங்கியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.

Rayudu

இந்த போட்டியில் 3-வது விக்கெட்டாக ராயுடு ஆட்டமிழந்து வெளியேறியதும் தோனி இறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் ஜடேஜா இறங்கி 5 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் அடுத்ததாக தோனி இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் இளம் வீரரான சாம் கரன் இறங்கி 6 பந்துகளில் 18 ரன்களை குவித்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடங்கும். பிறகு ஒருவழியாக தோனி இறுதியில் களம் இறங்கி இரண்டு பந்துகளை சந்தித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

curran

இந்நிலையில் போட்டி முடிந்து ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை முன்கூட்டி இறக்க என்ன காரணம் என்பதையும் தோனி பகிர்ந்துகொண்டார். அதுகுறித்து அவர் கூறுகையில் : இளம் வீரர்களான அவர்களை முன்கூட்டியே இறக்கினால் அவர்களின் திறமையை வெளிப்படுத்த அது அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். அதனாலே அவர்களை இறக்கினேன் அவர்களும் சிறப்பாக விளையாடினர். எதிர்பார்த்தது போலவே அவர்கள் சில முக்கியமான பவுண்டரிகளை விளாசினார்கள்.மேலும் பின்வரிசையில் பேட்டிங் செய்ய நான் மற்றும் ஜாதவ் ஆகியோர் இருந்ததாலும் இந்த முடிவை எடுத்தேன் என்றும் தோனி கூறினார்.

Advertisement