ஆசிய லெவனில் தோனிக்கு இடமில்லை. விளையாடும் 6 வீரர்கள் இவர்கள் தானம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

MSdhoni
- Advertisement -

வங்கதேசத்தில் வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய இரு தினங்களில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூறாவது பிறந்த நாள் நினைவாக நடத்தப்படவுள்ளன.

asia-xi-vs-world-xi

- Advertisement -

இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் டி20 தொடரில் இரு அணிகளும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேதிகள் தற்போது கூறப்பட்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய ஆசிய லெவனில் இடம்பெற்றிருக்கும் 15 வீரர்கள் குறித்த பெயர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி கேப்டன் விராட்கோலி, ராகுல், ஷிகர் தவான், குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கேஎல் ராகுல் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விராத் கோலி பெயர் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உட்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நியூசிலாந்து பயணத்தில் இருக்கும் இந்திய அணி அதனை முடித்துக்கொண்டு உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மூன்று நாட்கள் கொண்ட போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத இருக்கிறது. அந்த போட்டிகள் 12, 15, 18 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

dhoni

மேலும் அடுத்த 10 நாளில் ஐ.பி.எல் தொடர் துவங்க இருப்பதால் இந்த நெருக்கமான தேதிகளுக்கு இடையே இந்திய வீரர்கள் ஆசையில் அவனில் விளையாட இருக்கின்றனர். இந்த தொடருக்கான ஆசிய லெவனில் விளையாடுவார் என்று என்று எதிர்பார்க்கப்பட்ட தோனியின் பெயர் இந்த பட்டியலில் வெளியாகவில்லை. எனவே தோனியின் ரசிகர்கள் தற்போது வருத்ததில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement