ஹேண்டில்பார் மீசையுடன் தோனி வெளியிட்ட புகைப்படம். சர்ச்சைக்குள்ளான போட்டோ – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள 14வது ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெற இருப்பதால் அதற்குள் இருக்கும் ஓய்வு நேரத்தில் தற்போது தோனி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று நாட்களை கழித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ள தோனி ரத்தனாரி என்கிற இடத்தில் உள்ள மீனா பாக் எனும் இடத்தில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அங்கு தங்கி தனது ஓய்வு நாட்களைக் கழித்து வரும் தோனி தற்போது தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மரங்களை நடுவோம், காடுகளைக் காப்போம்” என வாசகத்துடன் பகிர்ந்துள்ளது. இதில் சர்ச்சையான விடயம் யாதெனில் “மரங்களை நடுவோம், காடுகளை காப்போம்” என வாசகம் எழுதி இருப்பதே ஒரு மரத்தால் ஆன பலகை என்பதனால் இந்த விடயம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்துக் கூறுகையில் : இந்த இல்லம் வடிவமைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் கழிவுகளாக அகற்றப்பட்ட மரங்கள்தான். இம் மரங்கள் அனைத்தும் குளிர்காலத்தில் நெருப்பு வைக்க பயன்படும். அது போன்ற தேவையற்ற மரங்களை வைத்து தான் இந்த வீட்டை வடிவமைத்துள்ளதாகவும் பதிலளித்துள்ளார்.

டோனியின் இந்த புகைப்படத்தில் ஹேண்டில்பார் மீசையுடன் இருக்கும் அவர் புது லுக்கில் இருந்தாலும் இந்த வாசகம் தற்போது இணையத்தில் சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement