சி.எஸ்.கே அணிக்காக தமிழில் பேசி நடித்த தல தோனி -வைரல் வீடியோ

MS
- Advertisement -

இன்னும் சிலமணி நேரங்களில் துவங்க உள்ள சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பு, சென்னை அணியின் கேப்டன் தோனி நடித்த விளம்பரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தல தோனி தமிழில் பேசி நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

தோனி எந்த விளம்பரத்தில் நடித்தாலும் அந்த விளம்பரம் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றது. சென்னை அணிக்காக இந்த வருடம் பல விளம்பரப்படங்கள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன. அந்த விளம்பரப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தொடர்ச்சியாக வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு வயதானவர்கள் அணி என்று கிண்டலடிக்கப்பட்ட சென்னை அணி அந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் வகையில் அனைத்து அணிகளையும் வென்று இறுதியில் 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்த ஆண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி திறம்பட விளையாடும் என்று நம்பலாம்.

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement