- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்த தல தோனி – இந்த சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா ?

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபிஎல் தொடருக்காக அங்கு செல்லும் முன்னேற்பாடிற்காக சென்னை வந்துள்ள தோனி இன்னும் சில தினங்களில் ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க உள்ளார். இதற்கு முன்னர் அவர் இன்று தமிழ் நடிகர் தளபதி விஜய்யை நேரில் சந்தித்ததாக பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலான. இந்த விடயம் உண்மையா ? என்று அனைவரும் யோசிக்க துவங்கினர்.

இந்நிலையில் அதற்கான விடை கிடைத்திருக்கிறது. ஆம் தல தோனி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பு எதற்காக ? என்ன காரணம் ? எனில் சென்னை வந்துள்ள தோனி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுவதற்கு முன்னர் சில விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

- Advertisement -

அந்த விளம்பரப் படம் பூந்தமல்லி ஹைவே அருகே உள்ள வேலப்பஞ்சாவடி கோகுலம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. அதே ஸ்டுடியோவில் தான் தளபதி விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது என்பதை அறிந்த தோனி விஜய்யை சந்தித்து அவருடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு புகைப்படங்கள் எடுத்து விட்டு சென்றுள்ளார்.

ஏற்கனவே 2008ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் தொடரில் விளையாடிய போது சென்னை அணியின் நட்சத்திர தூதராக விஜய் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து தற்போது தோனி விஜய்யை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு அவருடன் புகைப்படம் எடுத்து சென்றுள்ளார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் தல தோனியின் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களின் மூலம் இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by