சென்னை அணியில் 3 முக்கிய மாற்றங்களை கொண்டுவந்த கேப்டன் தோனி – ரசிகர்கள் மகிழ்ச்சி

Dhoni 1

ஐபிஎல் தொடரின் 41 ஆவது லீக் போட்டி இன்று சார்ஜா மைதானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. தற்போது நடைபெற்று முடிந்த நிகழ்வில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தீர்மானித்தார்.

csk-vs-mi

அதன்படி தற்போது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியில் மூன்று மாற்றங்கள் அதிரடியாக கொண்டு வந்துள்ளார் தோனி. அதனபடி துவக்க வீரர் ஷேன் வாட்சன்-இற்கு பதிலாக இம்ரான் தாஹிர் அணியில் கொண்டுவரப்பட்டுள்ளார்.

Tahir

அதுமட்டுமின்றி தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவ் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜெகதீசன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

jagadeesan

- Advertisement -

ஏற்கனவே சென்னை அணி 7 தோல்விகளை பெற்றுள்ளதால் இந்த போட்டியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இவர்கள் மூவருக்கும் தோனி வாய்ப்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக இன்றைய போட்டியில் பொல்லார்ட் கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியிலாவது சென்னை அணி வெற்றிபெறுமா ? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தொடரின் இறுதி நேரத்தில் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்துவார்களாக என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.