ருத்ர தாண்டவம் ஆடிய தோனி !

dhoni-csk
- Advertisement -

தொடர்கிறது தல தோனியின் ரன் குவிப்பு சிக்ஸ் மழையில் நிரம்பியது புனே மைதானம்.கடந்த சில போட்டிகளாக பழைய தோணியின் ஆட்டத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

தோனி

- Advertisement -

இன்று புனேவில் நடந்து வரும் ஆட்டத்தில் முதலில் பேட் செய்தது சென்னை அணி.இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான டூப்ளிசி மற்றும் வாட்சன் களமிறங்கினார்கள். டூப்ளிசி 33 ரன்களில் அவுடாக பின்னர் அதிரடியாக விளையாடி வாட்சன் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தர்ர்.பின்னர் களமிறங்கிய ரெய்னாவும் களமிறங்கிய வேகத்திலேயே 2 பந்துகளில் அவ்டாகி பெவிலியன் திரும்பினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ராயுடு மற்றும் தோனி கூட்டணி சென்னை அணியின் அதிரடியை தொடர்ந்தது. களமிறங்கிய முதலே நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு டெல்லி அணியின் பந்துகளை தெறிக்க விட்டனர் தோனி மற்றும் ராயுடு. பின்னர் இருவரில் யார் அரை சத்தத்தை நெருங்குவார்கள் என்ற கேள்விக்கு தனது 5 சிக்ஸ்ர் மற்றும் 2 பவுண்ட்றிகளின் மூலம் 22 பந்துகளில் தனது அரை சத்தத்தை பூர்த்தி செய்தார் தோனி. இறுதியில் 211 என்ற அபாரமான இலக்கை டெல்லிக்கு நிர்னையித்தது நமது சென்னை அணி.

Advertisement