MS Dhoni : ரோஹித்தை பின்தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த தல தோனி – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின

Dhoni
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

ind vs wi

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களை குவித்தார். தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்களை குவித்தார்.

- Advertisement -

பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஷமி சிறப்பாக பந்து வீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Dhoni

நேற்றைய போட்டியில் தோனி அடித்த 2 சிக்ஸர்கள் மூலம் மீண்டும் ரோஹித்தை பின்தள்ளி அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையினை பெற்றார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சார்பாக தோனி இதுவரை 346 போட்டிகளில் பங்கேற்று 227 சிக்சர்களை அடித்து உள்ளார். ஆனால் ரோகித் சர்மா 211 போட்டியில் பங்கேற்று 225 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

dhoni

ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் சாகித் அஃப்ரிடி 350 ஒரு சிக்சரை அடித்து முதல் இடத்தில் உள்ளார். கெயில் 324 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். ஜெயசூர்யா 270 சிக்சர்களை அடித்து மூன்றாவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கடுத்த இடங்களில் 227 தோனி மற்றும் 225 ரோஹித் ஆகியோர் உள்ளனர்.

Advertisement