தோனி சென்னையில் தரையிறங்கியதை உறுதி செய்த சி.எஸ்.கே நிர்வாகம் – வைரலாகும் புகைப்படம்

Dhoni

இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீதமுள்ள 31 போட்டிகளில் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

Ganguly-ipl

அதற்கான அட்டவணையையும் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் போட்டியில் விளையாடும் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சென்னை அணி எப்போது பயிற்சியை துவங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் ஆகஸ்ட் 15 அல்லது 16 ஆம் தேதி சென்னை அணி இங்கிருந்து ஐக்கிய அரபு அமீரக முடிந்து புறப்படும் என்று அணியின் தலைமை அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது சென்னை அணியில் முதல் நபராக தோனி இன்று தனது குடும்பத்துடன் சென்னை வந்து தரை இறங்கியுள்ளார். அதனை சி.எஸ்.கே அணியும் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உறுதிசெய்துள்ளது.

தனது குடும்பத்துடன் முன்கூட்டியே சென்னை வந்துள்ள தோனி இங்கு சில நாட்கள் பயிற்சியை மேற்கொண்டு பிறகு சில முன்னணி வீரர்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

தோனி சென்னை வந்து இறங்கியதும் அவர் குடும்பத்துடன் வந்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பார்ம் இழந்து காணப்படும் தோனி இம்முறை மீண்டும் சிறப்பான ஆட்டத்தை அங்கு வெளிப்படுத்துவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement