தோனி சென்னை வருவதில் ஏற்பட்ட மாற்றம். இந்த இருவருடன் இணைந்தே பயிற்சி செய்ய இருக்கிறாராம் – வெளியான தகவல்

Dhoni

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 13 ஆவது சீசன் பரபரப்பும், விறுவிறுப்பும் சற்றும் பஞ்சமில்லாத வகையில் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும் வீரர்களின் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற முடிந்ததால் தற்போது இன்னும் சில நாட்களில் வீரர்கள் தங்களது பயிற்சியை துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhoni

மேலும் ஆண்டுதோறும் சிஎஸ்கே அணிக்கு கிடைக்கும் வரவேற்பை விட இந்த ஆண்டு பல மடங்கு சிஎஸ்கே அணிக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த பல மாதங்களாக கிரிக்கெட் விளையாட மகேந்திர சிங் தோனி மீண்டும் களத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் சிறிது ஓய்வுக்குப் பின்னர் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி இதுவரை இந்திய அணிக்கு திரும்பவில்லை.

எனவே இந்த ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அவரது வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவதால் இந்த ஐபிஎல் தொடரில் தோனி எப்போது களமிறங்கி அசத்துவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தோனியின் ஆட்டத்தை காணாமல் காத்து கிடந்த சென்னை ரசிகர்களின் ஏக்கம் வரும் 29ம் தேதி முடிவுக்கு வருகிறது.

Dhoni-Csk

இந்நிலையில் இந்த தொடருக்கான பயிற்சியில் தோனி மார்ச் 1 ஆம் தேதி கலந்து கொள்வார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது வந்த அதிகாரப்பூர்வ தகவலின்படி மார்ச் 2ம் தேதி தான் அவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் பயிற்சிக்காக களமிறங்கப் போகிறார் என்ற தகவல் தற்போது புதிதாக வெளியாகி உள்ளது.

- Advertisement -

Raina

மேலும் கடந்த வருடம் தோனிக்கு மைதானத்தில் பயிற்சியின் போது கிடைத்த ரசிகர்கள் வரவேற்பை விட இந்தாண்டு மைதானம் அதிரும் வகையில் தோனியை வரவேற்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோருடன் இணைந்து பயிற்சியை ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -