தோனி 15 ஆண்டுகள் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அளித்த கவுரவம் – விவரம் இதோ

MSdhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி நேற்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை ரசிகர்கள் 15 years of Dhoni என்ற ஹேஷ்டேக் மூலம் இணையத்தில் வைரலாக்கினர். மேலும் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தோனியை கொண்டாடி வருகின்றனர்.

dhoni

தோனி இந்திய அணியில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இன்னும் அணியில் இடம் பெறவில்லை என்றாலும், அவரது ரசிகர்கள் இன்னும் அவரை கொண்டாடி தான் வருகிறார்கள். நேற்றுடன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்து. அதனை தோனி ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு உட்பட்ட அதிகாரப்பூர்வமான இணைய தளமான cricket.com.au என்ற பக்கத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் ஒருநாள் போட்டிகளுக்கான சிறப்பான கனவு அணியை அனைத்து நாடுகளிலும் இருந்த வீரர்களை கொண்டு தயார் செய்தது. அந்த கனவு அணியில் இந்திய அணியின் வீரரான தோனியை கேப்டனாக நியமித்தது.

அதுமட்டுமின்றி ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் பந்துவீச்சாளர்களில் இந்திய அணி வீரர்கள் யாரும் தேர்வாகவில்லை. இந்த அணியில்

1) ரோகித் சர்மா
2) ஆம்லா
3) விராட் கோலி
4) ஏபி டிவில்லியர்ஸ்
5) சாகிப் அல் ஹசன்
6) ஜாஸ் பட்லர்
7) தோனி
8) ரஷீத் கான்
9) மிட்செல் ஸ்டார்க்
10) லசித் மலிங்கா
11) ட்ரெண்ட் போல்ட்

- Advertisement -

dhoni

இதுவே ஆஸ்திரேலிய நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த 10 ஆண்டுகளின் கனவு அணியாகும். இந்த கனவு அணிக்கு தோனியை கேப்டனாக்கி அவருக்கு கவுரவத்தை கொடுத்துள்ளது ஆஸ்திரேலிய நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது.