தோனி மோசம்..! ரெய்னா ரொம்ப மோசம்..! கங்குலி சரமாரி தாக்குதல்..! – காரணம் இதுதான்..?

raina

சமீப காலமாக தோனி மீதான விமர்சனங்கள் சற்று ஓய்ந்திருந்தது.ஆனால், சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோனி மந்தமாக விளையாடினார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாக தோனியின் ஆட்டம் சிறப்பாக இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரோவ் கங்குலி விமர்சித்துள்ளார்
dhoni
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-2 கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மிகவும் மெத்தனமாக ஆடினார் என்று பல்வேறு குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தோனி அவ்வளவாக ஜொலிக்கவில்லை. முதல் ஒரு நாள் போட்டியில் தோனிக்கு பேட்டிங் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடிய தோனி 37 மற்றும் 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக இரண்டாவது போட்டியில் தோனி மந்தமாக விளையாடினார் என்று பல்வேறு விமர்சங்களும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் தோனியின் இந்த ஆமை வேக ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரோவ் கங்குலி “இது தோனியின் ஒரு மோசமான பேட்டிங் என்று தான் கூற வேண்டும். அவர் ஓராண்டு காலமாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.அவர் இந்திய அணியின் ஒரு சிறந்த வீரராக மாறலாம்.ஆனால், கடந்த ஓராண்டாக அவர் சற்று மோசமாக தான் விளையாடி வருகிறார் ” என்று கூறியுள்ளார்.
Suresh Raina
அதே போல ரெய்னாவை பற்றி கருத்து தெரிவித்த கங்கூலி ” இந்திய அணியில் உள்ள ரைனா மீதும் கொஞ்சம் பார்வை திரும்ப வேண்டும். அவரை விட மிக சிறந்த வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். அவர் நீண்ட காலம் விளையாடிவிட்டார். ஒரு நாள் போட்டியிலும் அவர் அதிக ரன்களை குவித்திருந்தாலும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் அவர் அதிக ரன்களை குவிக்கவில்லை. அதனை இந்தியா கவனிக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.