ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியில்டிம் பெய்ன் புதிய கேப்டனாக நியமிக்கபட்டார்.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை தோனிக்கு நிகராக புகழ்ந்து தள்ளியுள்ளார் டிம் பெய்ன்
ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட கடந்த ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்து சென்றது. இந்த தொடரின் முதல் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆனால் இந்த தொடரின் முதல் நான்கு ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் கடைசி ஆட்டம் நேற்று (ஜூன் 24) மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்டர்லிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.4.ஓவர்களில் அணைத்து விக்கெட்டிகளையும் இழந்து 205 ரன்களை எடுத்து. பின்னர் களமிறமங்கியா இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்யசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘ இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் சிறப்பான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட் ஸ்மேன் அவர் தான். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன் மகேந்திர சிங் தோனி, சிறப்பான வீரர்தான். ஆனால், இந்த நேரத்தில் ஜோஸ் பட்லர் தான் சிறந்த கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக முன்னணியில் இருக்கிறார்’ என்று ஜோஸ் பட்லரை புகழ்ந்துள்ளார்.