MS Dhoni : மைதானத்தை விட்டு வெளியே 111 மீட்டர் ராட்சஷ இமாலய சிக்ஸரை விளாசிய தோனி – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

Dhoni
- Advertisement -

நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டனான தோனி அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் இவர் அடித்த சிக்ஸ் ஒன்று மைதானத்தில் வெளியே சென்று விழுந்தது. 111 மீட்டர் அடிக்கப்பட்ட அந்த இமாலய சிக்ஸர் பார்வையாளர்களின் கண்களில் இருந்து மறைந்தது என்று வர்ணனையாளர்கள் கூறும் அளவிற்கு மைதானத்தின் மேற்கூரையில் மேல் பறந்தது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

தோனியின் இந்த சிக்ஸரை கண்ட ரசிகர்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் மட்டும் தான் இமாலய சிக்ஸர்கள் அடிக்க முடியுமா? எங்க தல தோனியும் அடிப்பார் என்று இணையத்தில் இந்த விடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

- Advertisement -

VK and MS

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Advertisement