இறங்கி வந்து பிரமாண்ட சிக்ஸரை அடித்த தோனி. விசிலை பறக்கவிட்ட ரெய்னா – வைரலாகும் வீடியோ

Dhoni

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக 5 நாள் பயிற்சியினை சென்னையில் மேற்கொண்ட சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பாக தங்களது பயிற்சிகளை முடித்து இன்று மதியம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்தனர். இந்த ஐந்து நாட்கள் பயிற்சி போட்டியை தமிழக வீரரான பாலாஜி தலைமை தாங்கி நடத்தினார்.

csk

இந்த பயிற்சி போட்டிகளில் சென்னை அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, ராய்டு, தீபக் சஹர் மற்றும் பியூஸ் சாவ்லா போன்ற சிஎஸ்கே அணி வீரர்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சியை மேற்கொள்வதால் காயம் ஏற்படக் கூடாது என்ற காரணத்தினால் சீராகவே அவர்கள் பயிற்சியை செய்தனர்.

இந்நிலையில் சி.எஸ்.கே அணி வீரர்கள் பயிற்சி செய்த வீடியோ ஒன்றினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில் அம்பத்தி ராயுடு, முரளிவிஜய், தீபக் சாஹர் ஆகியோர் பயிற்சி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன, அத்துடன் தோனி பந்து வீசுவது போன்று ரெய்னா டேட்டிங் செய்வது போன்றும் காட்சிகள் உள்ளன.

இறுதியாக தோனி இறங்கி வந்து ஒரு சிக்சர் அடிக்க அவருக்கு பின்னால் இருக்கும் ரெய்னா விசிலடித்து கொண்டாடும்படி அந்த வீடியோ நிறைவடைகிறது.இந்த வீடியோ தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓய்வினை அறிவித்த தோனி இந்த தொடரில் தனது அதிரடியை நிச்சயம் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து அவரின் ஆட்டத்தினை காண காத்திருக்கின்றனர்.