ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு கடைசி ஓவரை நிறைவு செய்த தோனி – வைரல் வீடியோ

Dhoni
- Advertisement -

நேற்று இரவு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையேயான போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தபோதும் தோனி தனியொருவராக நின்று அணியை சரிவிலிருந்து மீட்டார். குறிப்பாக அதிரடியாக ஆடிய அவர் 20 ஆவது ஓவரின் கடைசி மூன்று பந்துகளையும் சிக்சருக்கு விரட்டி போட்டியை பினிஷிங் செய்தார். தோனி அடித்த அந்த ஹாட்ரிக் சிக்ஸர் வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தோனி 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

அடுத்து 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் திரிபாதி மற்றும் ஸ்டோக்ஸ் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி சென்ற ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் பிராவோவின் அபாரமான பந்துவீச்சினால் 167 ரன்கள் மட்டுமே குவித்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிரடியாக ஆடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement