இத்தனை வருஷத்துல தோனி இப்போதான் இந்த பவுலருக்கு எதிரா முதல் பவுண்டரியே அடிச்சிருக்காரு – விவரம் இதோ

Dhoni-1
- Advertisement -

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பதினைந்தாவது ஐபிஎல் லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டுயூப்ளசிஸ் ஆகியோரின் அற்புதமான தொடக்கத்தால் 20 ஓவர் முடிவில் 220 ரன்களை அடித்தது. 221 ரன்கன் என்ற மிக கடினமான இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ruturaj

- Advertisement -

இந்த போட்டியில் 14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் செய்யாத ஒரு விஷயத்தை செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடினார் மகேந்திரசிங் தோனி. இவர் எப்போதுமே தனது பவர் ஹிட்டிங்கின் மூலம் எதிரணி பந்துவீச்சாளர்களை கலங்கடிப்பார்.

ஆனால் நேற்றைய போட்டிக்கு முந்திவரை அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்பின் பவுலரான சுனில் நரைன் ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடித்ததில்லை. அதையும் நேற்று நிறைவேற்றிவிட்டார் மகேந்திர சிங் தோணி. நேற்றைய போட்டியில் 17வது ஓவரை தோணிக்கு வீசினார் சுனில் நரைன். அந்த ஓவரின் ஐந்தாவது பந்து நோ பாலாக அமைய அதற்கு ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்டது.

narine

அப்படி வழங்கப்பட்ட ஃப்ரீ ஹிட் பந்தில் தோனி சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் பந்து எட்ஜ் ஆகி தேர்ட் மேன் திசையில் பவுண்டரிக்கு சென்றது. இதன் மூலம் ஐபிஎல் தொடர்களில் சுனில் நரைனுக்கு எதிராக தனது முதல் பவுண்டரியை அடித்தார் தோனி. இந்த பவுண்டரியானது நரைன் ஐபிஎல் தொடர்களில் தோனிக்கு வீசிய 65வது பந்தில் அடிக்கப்பட்டது.

dhoni 2

2012ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அறிமுகமான சுனில் நரைன் இதுவரை 15 இன்னிங்சில் தோனிக்கு பந்து வீசி உள்ளார். இதுவரை 69 பந்துகளை தோணிக்கு வீசியுள்ள சுனில் நரைன் 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒருமுறை தோனியை அவுட்டாக்கி உள்ளார். நரைனுக்கு எதிராக தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 56 மட்டுமே. தொடர்ந்து விளையாடிய தோனி 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ரஸ்ஸலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

Advertisement