MS Dhoni : டெல்லி அணியை வீழ்த்த தல தோனி வைத்துள்ள புதிய திட்டம் – விவரம் இதோ

சென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ்

Dhoni-Csk
- Advertisement -

சென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து தற்போது மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட அணியாக வலம் வருகிறது.

Iyer

- Advertisement -

ஏற்கனவே மும்பை அணியுடன் தோற்று உள்ள சென்னை அணி பேட்டிங்கில் சற்று சொதப்பி வருகின்றது. இருப்பினும் சென்னை அணி இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணியை தோனி தோற்கடிப்பதற்காக பல முக்கிய மாற்றங்களை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சென்னை அணியில் சில மாற்றங்களை செய்ய இருக்கும் தோனி தொடர்ந்து ஓப்பனிங்கில் சொதப்பிவரும் வாட்சனுக்கு பதிலாக முரளி விஜயை களமிறக்கி வாட்சனை மிடில் ஆர்டரில் விளையாடவைக்க திட்டம் வைத்துள்ளார். இதன்மேல் மிடில் ஆர்டர் வலுப்படும் மேலும் துவக்கத்தில் விக்கெட் இழந்து தடுமாறுவதை தவிர்க்க முடியும் என்று தோனி திட்டமிட்டுள்ளார்.

மேலும் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் மட்டுமே நன்றாக வீசி வருகிறார். எனவே இந்த போட்டியில் இதுவரை இந்த தொடரில் விளையாடாத வேகப்பந்துவீச்சாளரான மோஹித் சர்மாவை களமிறக்கும் திட்டமும் தோனியிடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படி இருந்தாலும் இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement