ஏற்கனவே தப்பு பண்ணிடீங்க. மீண்டும் அந்த தப்பை பண்ணாதீங்க – தோனிக்கு பறந்த வார்னிங்

Dhoni

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணியுடன் தோல்வி பெற்ற சென்னை அணி அதனுடைய 2வது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆட்டத்தை முடிக்காமல் கொஞ்சம் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டார்.

Dhoni

அதாவது ஒரு பாதி சரியாக ஒரு மணி நேரம் 30 நிமிடத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் மகேந்திர சிங் தோனி முதல் போட்டியில் சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்ட காரணத்தினால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு கூடுதலாக 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு போட்டிகளுக்கு அதே போல் செய்தால் நிச்சயமாக தோனி விளையாட முடியாமல் போகும்

- Advertisement -

முதல் போட்டியில் தாமதித்த தோனி இரண்டாவது போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் விளையாட்டை நடத்தி முடித்தார். இருந்தாலும் இதேபோல் இன்னும் இரண்டு போட்டிகளில் இவ்வாறு தாமதமாக ஆடினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதம் அதிக படுத்தப்படும். ஆனால் இரண்டு போட்டிகளுக்கு மேல் மூன்றாவது போட்டியில் அவர் தாமதிக்கும் பட்சத்தில் நிச்சயமாக போட்டு விளையாட முடியாமல் போய்விடும். இது சென்னை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேறு எவருமில்லை என்பது அனைவரும் அறிவர். அவருடைய இடத்தில் வேறு யார் வந்தாலும் அவ்வளவு சரியாக இருக்காது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ரசிகர்கள் நிச்சயமாக தோனி இரண்டாவது போட்டியை போல அனைத்து போட்டிகளையும் வெகுவிரைவில் விளையாடி முடிக்க வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பக்கங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- Advertisement -

Dhoni

ஐ.பி.எல் தொடரின் 12 ஆவது போட்டியில் இன்று சி.எஸ்.கே அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வீரர்களை கொண்ட ராஜஸ்தான் அணியை அனுபவம் வாய்ந்த சி.எஸ்.கே அணி வீழ்த்துமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement