ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய இரு அணிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் தங்க தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். மேலும் இந்த வருடம் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு நாளை பலப்பரிட்சை நடத்த உள்ளன. இந்த போட்டிக்காக தற்போது இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பெரிய இடைவெளிக்குப் பிறகு போட்டிகள் துவங்க இருப்பதால் முதல் போட்டியை வெற்றியுடன் துவங்கவே இரு அணிகளும் ஆர்வம் காட்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டியை காண உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தற்போது மும்பை அணியை வீழ்த்த தோனி புதிய திட்டம் ஒன்றை வைத்திருப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற சுழற்பந்து வீச்சு வீச்சுக்கு ஒத்துழைக்கும் மந்தமான ஆடுகளங்களில் நடைபெறுவதால் சென்னை அணியில் முக்கிய மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளனர். அதாவது வழக்கமாக இரண்டு ஸ்பின்னர் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் சென்னை அணி இம்முறை மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இறங்கும் என்பதே அந்த திட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
சென்னை அணியில் ஹர்பஜன் விலகினாலும் ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், சான்ட்னர் ஆகிய அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும், கரண் சர்மா, சாய் கிஷோர் போன்ற உள்ளூர் சுழற்பந்து வீச்சாளர்களும் இருப்பதால் சிஎஸ்கே அணிக்கு சுழற்பந்து வீச்சாளர்களின் தேர்வு என்பது எளிதாக அமையும். அதன்படி முதல் போட்டியில் பியூஷ் சாவ்லா, ஜடேஜா, இம்ரான் தாகிர் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் அல்லது ஹேசல்வுட் ஆகிய ஒருவர் பந்துவீச்சாளர்கள் ஆக இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் பேட்டிங்கில் பலமாக இருக்கும் சென்னை அணிக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் சென்னை அணி இந்த போட்டியை வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆடுகளங்கள் மந்தமாக செயல்படும் என்று தெரிந்தால் தோனி நிச்சயம் 3 பந்துவீச்சாளர்களை 4 ஓவர்கள் முழுவதுமாக வீச வைப்பார் என்றும் தெரிகிறது இதனால் நிச்சயம் தோனியின் வியூகம் இதுவாகத்தான் இருக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
எனவே நாளைய போட்டியில் நிச்சயம் சிஎஸ்கே அணி குறைந்தது மூன்று சுழற்பந்து வீச்சாளர் உடன் இறங்கும் அதோடு மும்பை அணியை வீழ்த்தும் என்று அவர்கள் கூறுகின்றனர். சென்னை அணியை விட மும்பை அணி பலமாக இருந்தாலும் தோனி தனது கேப்டன்சி மூலம் அதிசயத்தை நிகழ்த்துவார் என்று அவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.