சி.எஸ்.கே அணியில் நீடிக்கும் சிக்கல். என்ன முடிவு எடுக்கப்போகிறார் தல தோனி – விவரம் இதோ

Watson
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த தொடர் குறித்த பேச்சு துவங்கியதில் இருந்தே சிஎஸ்கே அணியில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டேதான் வருகின்றன. முதலில் சிஎஸ்கே குழுவின் 13 பேருக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து முன்னணி வீரரான ரெய்னா துபாய் சென்றும் அங்கு அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நாடு திரும்பினார்.

அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே நிர்வாகமும் கேப்டன் தோனியும் உள்ளனர். அதேபோன்று ஹர்பஜன் சிங்கும் இந்த தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகியதால் அவருக்கு பதிலாக வீரர்கள் தயாராக இருக்கின்றனர். இதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை ஏனெனில் அதற்கு பதிலாக கரண் ஷர்மா, பியூஸ் சாவ்லா, இம்ரான் தாஹிர், சான்ட்னர் என பல்வேறு ஸ்பின்னர்கள் அணியில் இடம் பெற்று உள்ளனர்.

ஆனால் ரெய்னாவுக்கு பதிலாக மூன்றாம் இடத்தில் இறங்கும் வீரர் குறித்த பேச்சு இன்னும் அடங்கிய பாடில்லை. இந்நிலையில் தற்போது தான் மீண்டும் அணியில் இணைய தயாராக இருப்பதாக ரெய்னா ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஆனாலும் அவர் இன்னும் துபாய் செல்ல வில்லை இன்னும் ஒரு வாரத்தில் ஐ.பி.எல் தொடர் தொடங்க உள்ள நிலையில் ரெய்னா குறித்து எந்த ஒரு முடிவையும் சிஎஸ்கே நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

- Advertisement -

இப்படி ரெய்னா வெளிப்படையாக தான் இணைய விரும்புவதாக கூறி இருந்தாலும் அது குறித்து எந்த ஒரு முடிவையும் சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் இதுவரை தெரிவிக்கவில்லை. ஏற்கனவே ரெய்னாவின் சேர்க்கை குறித்து தோனி தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தோனியை கை காட்டினார். ஆனால் தோனியும் இந்த விடயத்தில் தற்போது வரை மௌனம் மட்டுமே காத்து வருகிறார்.

அதனால் சி.எஸ்.கே அணியில் ரெய்னாவை இணைப்பாளர் இல்லை அல்லது தான் அதன் இடத்தில் இறங்கி விளையாடுவாரா என்பது தொடரின் ஆரம்பத்தில் தான் தெரியும் ஏற்கனவே சிஎஸ்கே அணியின் முக்கிய அதிகாரியான காசிவிஸ்வநாதன் இல்லை என்றாலும் தோனி ஒரு சிறப்பான கேப்டன் இருக்கிறார் அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement