MS Dhoni : 15 வருட கிரிக்கெட் பயணத்தில் தோனிக்கு 2 ஆவது முறையாக மட்டுமே இது நடந்துள்ளது – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும்

dhoni
dhoni
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ind vs afg

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.

Dhoni

நேற்றைய போட்டிகளில் 52 பந்துகளை சந்தித்த தோனி 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிலும் அவர் ஆட்டமிழந்த விதம் தான் தற்போது ஒரு விசித்திர சாதனை படைத்துள்ளது. அதன்படி தோனி தனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 340க்கும் மேற்பட்ட போட்டிகளில் தற்போது தான் இரண்டாவது முறையாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதன் முறையாக ஸ்டம்பிங் முறையில் தோனி ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement