தோனியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ளவுள்ள 3 முக்கிய வீரர்கள் – லிஸ்ட் இதோ

CSK

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டுமுதல் ஐபிஎல் தொடர் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது 14வது சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆவது முறையாக கைப்பற்றி அசத்தியது.

ipl

அதனால் மீண்டும் எப்பொழுது இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் பிசிசிஐ-யின் தீவிர முயற்சியினால் தற்போது இந்த ஆண்டு இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த போட்டிகள் நடைபெறும் மைதானங்களையும் தற்போது பிசிசிஐ தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

அந்த வகையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதால் இந்த முறை சிஎஸ்கே அணி பலமாக திரும்பும் என்றும் அதற்குண்டான வீரர்களை தயார் செய்யும் என்றும் எதிர்பார்த்திருந்தனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஏலத்தின் போது சில முக்கிய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.

அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி மீண்டும் எப்போது பயிற்சிக்கு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நேற்று சென்னை அணியில் முதல் ஆளாக தோனி சென்னை வந்தடைந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே நிர்வாகிகள் என பலரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

- Advertisement -

Rayudu

சென்னை வந்தடைந்த தோனி விரைவில் பயிற்சியை துவங்குவார் என்றும் அவருடன் இணைந்து சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களான அம்பத்தி ராயுடு, ருதுராஜ் ஜெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று சி.எஸ்.கே அணியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி உள்ளூர் வீரர்கள் சிலரும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.