ஒருவழியாக சி.எஸ்.கே அணியில் இருந்து ஒரு வீரரை தூக்கி இன்னொருவருக்கு வாய்ப்பு வழங்கிய தோனி – விவரம் இதோ

Dhoni-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் தற்போது துவங்கி உள்ளது. சற்று முன்னர் துவங்கிய இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

karthik

சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் அசத்தல் பார்ம்மிற்கு திரும்பியுள்ள சிஎஸ்கே அணி தனது வெற்றிப் பயணத்தை தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்றுமுன்னர் டாஸ் போடப்பட்ட இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது சென்னை அணி பந்துவீசி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியில் ஒரு மாற்றத்தை அறிவித்தார்.

அதன்படி சுழல்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை வெளியேற்றி அவருக்கு பதிலாக கரன் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இருப்பினும் எந்த ஒரு தமிழக வீரர்கள் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் கேதர் ஜாதவ் நீக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சாவ்லா நீக்கப்பட்டது விசித்திரமான முடிவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக சி.எஸ்.கே அணியில் இடம்பெற்றுள்ள கரன் சர்மா இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் இன்று தான் தனது முதல் போட்டியில் விளையாட வாய்ப்பினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக வீரர்களான சாய் கிஷோர் மற்றும் ஜெகதீசன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Advertisement