பட்லர் விக்கெட்டை வீழ்த்த ஜடேஜாவுக்கு ஆலோசனை வழங்கிய தோனி – ஸ்டம்ப் மைக்கில் பதிவான உரையாடல்

Buttler

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 188 ரன்கள் அடித்தது. பின்பு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இந்த தொடரில் 2 ஆவது வெற்றியை பதிவு செய்தது.

csk vs rr

இந்த போட்டியில் 2-வது இன்னிங்சை ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பட்லர் அதிரடியாக விளையாடி அந்த அணிக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தபோது, அவரை அவுட்டாக்க ஜடேஜா விற்கு தோனி கூறிய ஆலோசனை அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.

ஆட்டத்தின் 8வது ஓவரில் பட்லருக்கு பந்துவீசினார் ஜடேஜா. அந்த ஓவரில் இரண்டாவது பந்தையும், மூன்றாவது பந்தையும் ரிவர்ஸ் ஷீப் ஷாட் ஆடி பவுண்டரி அடித்திருந்தார் பட்லர். அந்த இரண்டு பந்துகளுமே ஸ்டம்ப் லைனைவிட்டு வெளியே வீசியிருப்பார் ஜடேஜா. மீண்டும் 12வது ஓவரை வீச ஜடேஜாவை அழைத்தார் தோனி.

அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்தது பட்லர் தான். பட்லரின் மன நிலையைப் புரிந்து கொண்ட தோனி ஜடேஜா விடம் “ஸ்டம்ப் லைனில் பந்தை வீசு, கொஞ்சம் மேலே பிட்ச் பன்னு” என்று ஆலோசனை வழங்கியது அங்கிருந்த ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது. ஜடேஜாவும் தோனி கூறியது போலவே பந்து வீச, இதை எதிர்பாராத பட்லர் போல்டாகி வெளியேறினார்.

- Advertisement -

jadeja

அதுவரை ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஆடிக்கொண்டிருந்த பட்லர் அவுட் ஆனதும், பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.