ராயுடு அடுத்தப்போட்டியில் விளையாடுவாரா ? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தோனி அன்ட் கோ

rayudu-2
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முப்பதாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ஒருபக்கம் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் இறுதிவரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் குவித்தார்.

cskvsmi

- Advertisement -

இறுதி நேரத்தில் பிராவோவும் சிறிது அதிரடி காண்பிக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை குவித்தது. பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே குவித்ததால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த வெற்றி குறித்து பேசிய தோனி கூறுகையில் : ஒரு கட்டத்தில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தபோது நிச்சயம் யாராவது ஒருவர் கௌரவமான ரன் குவிப்பிற்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். அதனை ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிராவோ ஆகியயோர்கள் செய்தார்கள்.

Ruturaj

நாங்கள் நினைத்ததை விட சற்று அதிகமாக ரன் கிடைத்தது. 140 ரன்கள் வரை மட்டுமே வரும் என்று எதிர்பார்த்தநிலையில் 160 ரன்கள் வரை குவித்தது அபாரமான ஒன்று. இந்த மைதானம் சற்று ஸ்லோவாக இருந்ததால் அடிக்க ஆசைப்படும் வீரர்கள் ஆட்டம் இழந்திருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தால் பின்னால் வருபவர்களுக்கு சிறுது கஷ்டமாகவே இருந்தது என்று கூறினார்.

rayudu 1

மேலும் இந்தப் பேட்டியின் முடிவில் ராயுடுவின் காயம் குறித்து பேசிய தோனி கூறுகையில் : போட்டி முடிந்து ராயுடு சிரித்துக் கொண்டுதான் இருந்தார். அவருடைய கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிகிறது. அடுத்த போட்டிக்கு 4 நாட்கள் இருப்பதால் நிச்சயம் இந்த ஓய்வு நாட்களில் அவர் தயாராகி விடுவார் என்று தோனி கூறினார். அதேபோன்று தற்போது வெளியான சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மற்றும் தலைமை நிர்வாகி ஆகியோரது அறிக்கையிலும் ராயுடுவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என்று நினைத்தோம். ஆனால் நல்லபடியாக அப்படி எதுவும் நடக்கவில்லை ராயுடு நலமுடன் உள்ளார் என்றும் நிச்சயம் அடுத்த அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் அவர்கள் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement