இதுவரை நாம் யாரும் பார்த்திடாத ஒரு புதிய வீரருக்கு அணியில் இடம் அளித்த தோனி – யார் அந்த வீரர் தெரியுமா ?

Dhoni 1

ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் போட்டி தற்போது துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி தற்போது பெங்களூர் அணி தனது இன்னிங்சை விளையாடி விளையாடி முடித்துள்ளது. 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 50 ரன்களையும் டிவில்லியர்ஸ் 39 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தற்போது சென்னை அணி 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியில் மேலும் ஒரு புதிய இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் தோனி. ஷர்துல் தாகூர்க்கு பதிலாக இடம்பெற்றுள்ள அந்த புதிய வீரர் மோனு குமார். இதுவரை ரசிகர்களுக்கு பெரிய பரிச்சயம் இல்லாத இவர் இந்த போட்டியில் தனது மோசமான பந்துவீச்சையே வெளிப்படுத்தினார் என்று கூறலாம்.

monu kumar

இந்த சீசனில் முதல் போட்டியாக இந்த போட்டியில் விளையாடி உள்ள மோனு குமார் 2 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டையும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு நோ பால் மற்றும் 3 வொயிட் பந்துகளையும் இவர் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -