நீ லோக்கல் பாய். உன்னால தான் சி.எஸ்.கே டீம் ஜெயிக்கனும் – இளம்வீரருக்கு ஆலோசனை வழங்கிய தோனி

Dhoni
- Advertisement -

நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடர் அவ்வளவு கோலாகலமாக தொடங்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் சென்னை அணி முதலில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து பெரிய பின்னடைவை சந்தித்தது. ஆனாலும் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5வது லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி பேட்டிங்கில் 200 ரன்களுக்கு மேல் குவித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

CSK vs RCB 2

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை இந்த தொடரில் சி.எஸ்.கே அணி பதிவு செய்திருந்தது. இதனை தொடர்ந்து இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தற்போது உள்ள அணியின் பேட்டிங் பலமாக இருந்தாலும் பந்துவீச்சை பொறுத்தவரை மிகப் பெரிய பலவீனம் இருப்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அதேபோன்று சிஎஸ்கே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் இந்த தொடரில் இருந்து விலகியது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சிஎஸ்கே பந்துவீச்சில் கூடுதல் கவனம் எடுத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

Virat Kohli vs CSK

இந்நிலையில் சென்னை அணியின் இளம் வீரரான முகேஷ் சவுதரிக்கு தொடர்ந்து பல ஆலோசனைகளை தல தோனி வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இளம் வீரரான முகேஷ் சவுத்ரி மும்பையை சேர்ந்தவர் என்பதனால் அங்குள்ள மைதானங்களில் அவர் நிறைய விளையாடியுள்ளார்.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து நம்பிக்கை அளித்து வரும் தோனி இது உன்னுடைய சொந்த கிரவுன்ட் நிச்சயம் நீ இங்கு சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். உன்னை நம்பித்தான் அணி உன்னை தேர்வு செய்துள்ளது. எனவே எந்த அழுத்தமும் இன்றி விளையாடி அணிக்கு வெற்றி தேடி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடருக்கு சவால் விடும் வகையில் உலகிலேயே முதல் முறையாக புதிய தொடரை ஆரம்பிக்கவுள்ள – பாக்

அதோடு இது உன்னுடைய சொந்த மைதானம் நீ இங்கு இயல்பாக பந்து வீசினால் எதிரணி உன்னை சமாளிப்பது கடினம் என்று தோனி அவருக்கு நம்பிக்கை அளித்து ஊக்கம் கொடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement