MS Dhoni : ரன் ஓட திணறிய தோனி. தோனிக்கு என்ன ஆனது தெரியுமா ? – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும்

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

rahane

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களை குவித்தார். பட்லர் 23 ரன்களை குவித்தார்.

பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தோனி 58 ரன்கள் குவித்தார். ராயுடு 57 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Dhoni

இந்த போட்டியில் 19 ஆவது ஓவரில் தோனி தொடர்ச்சியாக இரண்டு ரன்கள் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது தோனி மிகவும் களைத்து ரன் ஓடமுடியாமல் கஷ்டப்பட்டார். உடனே சென்னை அணியின் பிசியோதெரபிஸ்ட் மைதானத்திற்குள் ஓடி வந்து தோனிக்கு சில முதலுதவிகளை செய்தார். பிறகு சாதாரணமாக விளையாட துவங்கிய இவர் அந்த ஓவர் முழுவதும் மிகவும் களைத்து காணப்பட்டார்.

Dhoni 1

இதற்கு காரணம் தொடர்ச்சியாக ரன்கள் ஓடிக்கொண்டிருந்ததால் தோனிக்கு அடிவயிற்று பகுதியில் மூச்சு பிடிப்பின் காரணமாக மூச்சு விட தோனி சிரமப்பட்டார். இதுவே தோனியின் சோர்வுக்கு காரணமாக அமைந்தது. தோனி மூச்சுவிட அவதிப்பட்ட போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போட்டிக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய தோனி சாதாரணமாக மகிழ்ச்சியுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement