க்ளீன் போல்டாகியும் அதிர்ஷ்டத்தால் டக் அவுட்டிலிருந்து தப்பிய தோனி – வீடியோ

Dhoni-1
- Advertisement -

நேற்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யும்போது 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து கொண்டிருந்தது. அப்போது களமிறங்கிய தோனி தான் சந்தித்த இரண்டாவது பந்தில் ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்டானார். ஆனால், பைல்ஸ் கீழே விழாததால் தோனி அவுட் இல்லை என்று தெரிவித்தார். இந்த அதிர்ஷ்டத்தால் தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு உதவினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தோனி 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

அடுத்து 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் திரிபாதி மற்றும் ஸ்டோக்ஸ் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி சென்ற ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் பிராவோவின் அபாரமான பந்துவீச்சினால் 167 ரன்கள் மட்டுமே குவித்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிரடியாக ஆடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement