இது மட்டும் இந்தாண்டு நடந்தா ஐ.பி.எல் இருந்தும் தோனி ரிட்டயர்டு ஆயிடுவாராம் – வெளியான அதிர்ச்சி தகவல்

Dhoni

நேற்று முன்தினம் இரவு திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அதிரடியாக ஓய்வினை அறிவித்துவிட்டார் தோனி. இதன் காரணமாக ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். இந்திய அணிக்காக 16 வருடங்கள் விளையாடிய ஒரு வீரர் திடீரென அணியில் ஆட மாட்டேன் என்று கூறிவிட்டால் அப்படித்தான் இருக்கும். தற்போது ரசிகர்கள் அவருக்கு சமூகவலைதளத்தில் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.

Dhoni

பல முன்னாள் வீரர்கள் தோனிக்கு ஒரு இறுதிப் போட்டியை நடத்தி அவருக்கு சரியான மரியாதை செலுத்த வேண்டுமென்று கூறி வருகிறார்கள். ஆனால், தோனியின் எண்ணம் அதுவாக இருக்காது. எப்போதும் எளிமையையே விரும்புவார். தோனியே இப்படித்தான் 2014ம் ஆண்டு டெஸ்ட் தொடரின் போது திடீரென ஓய்வினை அறிவித்துவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த ஆண்டு தோனி ஆட மாட்டார் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது தற்போது. தற்போது இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள தொடருக்காக சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். வரும் 20 ஆம் தேதி சென்னை அணி தொடருக்கு தயாராகி பயணிக்க உள்ளது.

Dhoni

தோனி டி20 உலககோப்பையில் விளையாடி கோப்பையை வென்று ஓய்வு பெறலாம் என நினைத்தார். ஆனால் இந்த ஆண்டு இத்தொடர் நடைபெறாமல் போனதால் ஐ.பி.எல் கோப்பையை குறிவைத்துள்ளார். ஒருவேளை இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுவிட்டால், தோனி இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற ஒரு தகவல் கசிந்துள்ளது.

- Advertisement -

Dhoni

இது குறித்து பேசிய சிஎஸ்கே அதிகாரிகளும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடாவிட்டாலும் அவர் ஒரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாகவே இருப்பார் என்று கூறியுள்ளனர். எப்படிப் பார்த்தால் எப்படியும் தோனியை இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று விட்டால் ஓய்வு பெற்று விடுவார் என்றே தெரிகிறது.