- Advertisement -
ஐ.பி.எல்

39 வயதிலும் இப்படி ஒரு டைவ்வா. தோனியின் அசாத்தியமான கேட்சை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

- Advertisement -

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 20 ஆவது கடைசி ஓவரை சென்னை அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வீசினார். அவர் வீசிய அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட மாவி பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து எட்ஜ் எடுத்த காரணத்தினால் பந்து பின்னோக்கி கீப்பரிடம் சென்றது. அப்போது ஒரு கையில் கிளவுஸ் இன்றி இருந் தோனி அந்த பந்தை எகிரி தடுத்தார்.

மேலும் தடுத்தது மட்டுமின்றி அந்த பந்தினை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த தோனி டைவ் அடித்து அந்த கேட்சை பிடித்தார். அவர் பிடித்த இந்தக் கேட்ச் அற்புதமாக அமைந்தது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமின்றி 39 வயதில் இப்படி ஒரு கேட்சை பிடித்திருக்கிறார் தோனி என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by