தினமும் 3-4 நேரம் தனி பிராக்டீஸ். தவறு நடக்கும் இடத்தை உணர்ந்து – தோனி எடுக்கும் முயற்சி

Dhoni

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (செப்டம்பர் 19) ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும், அதேபோன்று 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் சிஎஸ்கே அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது.

Csk-vsMi

இதன் காரணமாக இந்த முதல் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் மேலும் முன்னேற்றம் காணும் என்கிற காரணத்தினால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. சி.எஸ்.கே அணி இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுவிடும். அதேபோன்று மும்பை அணியும் 4-5 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

எனவே இரு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இம்முறை பலமாக மீண்டு வந்துள்ளது. சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி வந்தாலும் கேப்டன் தோனியின் பேட்டிங் பார்ம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஏனெனில் 40 வயதில் விக்கெட் கீப்பிங், கேப்டன்ஷிப், ரன்னிங் என அனைத்தும் சரியாக இருந்தாலும் பேட்டிங்கில் அவரால் பந்துகளை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை.

Dhoni

ஐபிஎல் தொடர் என்றாலே எப்போதும் அதிரடியாக விளையாடும் தோனி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பந்தை அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 37 ரன்களை மாறுமே அடித்துள்ளார். சிலசமயங்களில் பந்தினை அவரால் கனெக்ட் செய்யவே முடியவில்லை. இதன் காரணமாக தற்போது பேட்டிங்கில் தவறு இருப்பதை உணர்ந்த தோனி ஐக்கிய அரபு அமீரகத்தில் தினமும் 3 முதல் 4 மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார்.

- Advertisement -

40 வயதைத் தொட்ட தோனி தனது கரியரின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்தே தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொள்வதால் நிச்சயம் இந்த ஆண்டு கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement