சென்னைக்கு விமானத்தில் கெத்தாக வரும் தல தோனி. ரசிகர்கள் ஆரவாரம் – புகைப்படம் உள்ளே

Dhoni
- Advertisement -

இந்த வருடம் 12ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சியில் ஈடுபட இன்று விமானம் மூலம் இன்னும் சில மணி நேரத்தில் சென்னைக்கு வர இருக்கிறார் தல தோனி. தற்போது அவர் விமானத்தில் பயணிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் :

- Advertisement -

இதில் சிகப்பு நிற தொப்பி, காதில் ஹெட்செட் மற்றும் டி-சர்ட் என நம்ம தல தோணி அசத்தலாக உள்ளார். அவரின் அருகில் சென்னை அணியின் வீரரும், தோனியின் நண்பருமான கேதார் ஜாதவ் அவரின் அருகி அமர்ந்துள்ளார்.

தோனி செல்பி எடுக்க அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சி.எஸ்.கே அணி நிர்வாகம். வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளது.

இதற்காக ஏற்கனவே பேட்டிங் பயிற்சியாளரான மைக்கல் ஹஸ்ஸி சென்னை வந்து சென்னை வீரர்களுக்கு பயிற்சியினை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement