ஐ.பி.எல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஐந்தாவது போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்தது.
இதில் குறிப்பாக அந்த அணியின் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும், கடைசியாக இறங்கிய பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 8 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 216 ரன்கள் குவித்தது. இந்த போட்டியின் இடையே அந்த அணிக்காக 6 ஆவதாக இளம் வீரர் டாம் கர்ரன் களம் இறங்கினார்.
அவர் 9 பந்துகளில் 10 ரன் எடுத்திருந்த நிலையில் 18வது ஓவரின் 5-வது பந்தை தீபக் சாஹர் வீசினார். அந்த பந்து பேட்ஸ்மேன் டாம் கர்னின் பேட்டில் பட்டு தோனி கேட்ச் பிடித்தார். உடனடியாக அதற்கு விக்கெட் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் நடுவர்கள் 3 ஆவது உதவியை நாடினர். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடம் ரிவியூ இல்லை இதன் காரணமாக அவர் வெளியேறிய ஆகவேண்டும்.
ஆனால் நடுவர்கள் மூன்றாவது நடுவரிடம் சென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பதிலாக ரிவ்யூ கேட்பதுபோல் ஒரு செயலைச் செய்தனர். மூன்றாவது நடுவரிடம் செல்ல அப்போது பந்து பேட்டில் படாமல் காலில் பட்டு சென்றது என்றும் மேலும் பந்து தரையில் பட்டு பிடித்ததும் தெரியவந்தது கூறி விக்கெட் இல்லை என்று அறிவித்தனர். இதனால் நடுவரிடம் சென்று தோனி கோபப்பட்டது சர்ச்சையானது.
ஆனால் எடுத்தவுடன் மூன்றாவது நடுவரை சோதிக்காமல் எப்படி அவுட் கொடுத்தீர்கள் அவுட் கொடுத்த பின்னர் அந்த அணிக்கு ரிவியூ இல்லை என்று தெரிந்தும் மீண்டும் ஏன் 3 ஆவது அம்பயரிடம் சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற செயல்கள் ரிவ்யூ முடிந்த அணிக்கு மீண்டும் ஒரு இலவசம் கொடுப்பதுபோல் இருக்கிறது எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.
ஆனால் இந்த விடயத்தில் சிலர் தோனி அவுட் இல்லாத விக்கெட்டை கேட்டு முறையிடுவதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அப்படி செய்யவில்லை அம்பயர்களின் முடிவுகளில் ஏற்ப்பட்ட குழப்பத்தினால் தான் அவர் கோபப்பட்டாரே தவிர விக்கெட்டை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோபப்படவில்லை இதுவே உண்மை.