அப்பாடா ஒரு வழியா ஜாதவை தூக்கிய தோனி. அவருக்கு பதில் இவர்தான் ஆடப்போறார் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த தோனி

Dhoni-1
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே இன்று ஐபிஎல் தொடரில் 25 வது லீக் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் 25 போட்டியில் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 முறையும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

Kohli

பெங்களூர் அணி மிகச் சிறப்பாக ஐபிஎல் தொடரில் செயல்பட்டு வருவது மட்டுமல்லாமல் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் வரும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது துபாய் இன்று நேஷனல் மைதானத்தில் டாஸ் போடப்பட்டு துவங்கியுள்ள இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி தற்போது சென்னை வீரர்கள் பந்துவீச தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை தோனி செய்துள்ளார்.

Jagadeesan

கடும் கட்டாயத்திற்கு இடையே ஜாதவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் என் ஜெகதீசன் அவரது இடத்தில் விளையாட உள்ளார். இந்த அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய போட்டியில் விளையாடும் சென்னை அணியின் லெவன் இதுதான்

- Advertisement -

1) வாட்சன்

2) டூபிளெஸ்ஸிஸ்

- Advertisement -

3) ராயுடு

4) தோனி

- Advertisement -

5) ஜெகதீசன்

6) ஜடேஜா

7) சாம் கரன்

8) பிராவோ

9) தீபக் சாகர்

10) ஷர்துல் தாகூர்

11) கரன் சர்மா

Advertisement