MS Dhoni : எல்லை மீறிய தோனி. மீண்டும் சர்ச்சைக்கு உண்டான போட்டி – விவரம் இதோ

நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 18 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் முதல் 3 பந்துகளுக்கு 10 ரன்களை அடித்து தோனி விக்கெட்டையும் இழந்தது சென்னை

Dhoni-2
- Advertisement -

நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 18 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் முதல் 3 பந்துகளுக்கு 10 ரன்களை அடித்து தோனி விக்கெட்டையும் இழந்தது சென்னை அணி. விக்கெட்டை இழந்தாலும் தோனி களத்தின் வெளியே நின்று போட்டி முடியும்வரை பொறுத்திருந்தார்

Dhoni

- Advertisement -

அப்போது 4 ஆவது பாலை வீசிய ஸ்டோக்ஸ் மார்புக்கு மேல் வீச ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது களத்தின் வெளியே இருந்த தோனி உள்ளே வந்து அம்பயருடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், அம்பயர் அதனை ஏற்க மறுத்தார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலின் மூலம் தோனியின் செய்கை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அம்பயரின் முடிவை எதிர்த்த காரணத்திற்காக தோனிக்கு 2 போட்டிகளில் விளையாட தடையோ அல்லது போட்டி ஊதியத்திலிருந்து 50 % அபராதமோ விதிக்கப்படும் என்று தெரிகிறது.

Dhoni 1

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

- Advertisement -

rahane

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களை குவித்தார். பட்லர் 23 ரன்களை குவித்தார்.

rayudu

பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தோனி 58 ரன்கள் குவித்தார். ராயுடு 57 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement