தோனி இந்திய அணிக்காக தற்போது விளையாடவில்லை என்றாலும் அவர் ரசிகர்கள் மைதானத்தில் செய்யும் காரியம் தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. அதனை போன்று நேற்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற்ற இறுதி டி20 போட்டியின் போது தோனி விளையாடவில்லை என்றாலும் அவரை பார்ப்பதற்காக இங்கிலாந்திலிருந்து வந்த தோனி ரசிகர் தோனியின் 7 ஆம் எண் டீசர்ட் அணிந்து மேலும் இந்திய அணியின் தேசிய கொடியின் நிறத்தை தனது கையில் போட்டு தோனி தோனி என்று அரங்கம் அதிரும் படி கத்தி தோனியின் புகழ் பாடி உள்ளார். இதனை கண்ட ரசிகர்களும் தோனி தோனி என்று ஆரவாரம் செய்ய மைதானமே நேற்று தோனியின் பெயரால் அதிர்ந்தது. தோனி ரசிகர்களின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் :
Jersey No. 7 – FOREVER ❤
A proud @msdhoni fan from England spotted during todays match in Bangalore.
Just another day to prove that this man is universally loved!????
Pic Credit : Vishaal Jigarthanda#TeamIndia #MSDhoni #INDvSA pic.twitter.com/14pca1mYOn
— MS Dhoni Fans Official (@msdfansofficial) September 22, 2019
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன்கள் குவித்தார் மற்றபடி இந்திய அணி வீரர்கள் ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை.
அதன் பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 140 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.