ஒரே ஒரு கேட்சை தான விட்டாரு. அதுக்கா இப்படி கலாய்ப்பீங்க – நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளான தோனி செய்த சம்பவம்

dhoni 1
Advertisement

சென்னை அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் தனது கேப்டன்சி, பேட்டிங் என இரண்டிலும் எப்படி ஆதிக்கம் செலுத்தி வருகிறாரோ அதே போன்று தனது சிறப்பான விக்கெட் கீப்பிங் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் தனித்துவமான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். சிஎஸ்கே அணிக்காக கடந்த 14 வருடங்களாக முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் தோனி இதுவரை பலநூறு கேட்ச்கள், ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட்டுகள் என அனைத்தையும் செய்து அசத்தியுள்ளார்.

Dhoni

அதிலும் குறிப்பாக அவர் செய்யும் மின்னல்வேக ஸ்டம்பிங்ற்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அது மட்டுமின்றி அவரின் பல ஸ்டம்பிங் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்து உள்ளன. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது முதல் ஓவரை வீசிய தீபக் சாஹர் இன் பந்தில் தோனி கேட்சை தவறவிட்டது தற்போது நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரரான பேர்ஸ்டோவுக்கு எதிராக தீபக் சாகர் வீசிய அந்த பந்து அவரது பேட்டில் பந்து லெக் சைடில் சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க டைவ் அடித்த தோனி கடைசி நொடியில் பந்தை தவறவிட்டார். தோனி இதுபோன்று எளிதான கேட்ச் தவற விடும் மிகவும் அரிதாக நடக்கும் சம்பவம்.

dhoni 2

அப்படி நேற்று தனது கைக்கு ஈசியாக வந்த கேட்ச்யை தவறவிட்ட தோனியை சிலர் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் அடுத்த சில ஓவர்களிலேயே சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியதால் பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் தோனி தவறவிட்ட இந்த கேட்ச்க்கும் சில காரணங்கள் இருக்கும் என அவரை ஆதரித்து ரசிகர்கள் சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதே வேளையில் அவர் தவற விட்ட இந்தச் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement