MS Dhoni : நான் 19 ஆவது ஓவரில் சிங்கிள் எடுக்காததற்கு காரணம் இதுதான் – தோனி பளீர்

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Dhoni

இந்தப்போட்டியில் 19 ஓவர் குறித்து தோனி பேசியுள்ளார் அது பற்றி அவர் கூறுகையில் : 19 ஆவது ஓவரில் நான் நின்று கொண்டிருந்தபோது மைதானத்தில் பந்து நின்று வருவதை கணித்தேன். அதனால் புதிதாக வரும் வீரர்கள் பேட்டிங் செய்ய கஷ்டப்படுவார்கள். மேலும், பந்து பேட்டிற்கு வராது நாம்தான் அதனை கணித்து நமது ஷாட்டை மாற்ற வேண்டும். களத்தில் நிறைய நேரம் நான் விளையாடியதால் எனக்குள் நம்பிக்கை இருந்தது அந்த ஓவரில் பவுண்டரிகளை அடிக்க முடியும் என்று அதனால் நான் சிங்கிள் ஓடவில்லை.

கடைசி ஓவரின் போதும் முதல் 5 பந்துகளை அதன் வேகம் மற்றும் பந்துவரும் பகுதி ஆகியற்றை கணித்து பந்துகளை அடித்தேன். ஆனால், கடைசி பந்தினை உமேஷ் மெதுவாக வீச சற்று திணறி அந்த பந்தை கோட்டை விட்டேன். அந்த பந்தில் நான் எதிர்பார்த்த வேகம் இருந்திருந்தால் அதையும் அடித்து அணிக்கு வெற்றியை தந்திருப்பேன் என்று தோனி கூறினார்.

Advertisement