இறுதி போட்டிக்கு செல்வது போன்ற சத்தத்துடன் பயிற்சிக்கு சென்ற தோனி. ரசிகர்கள் மாஸ் சவுண்ட் – வீடியோ

Dhoni-Csk
- Advertisement -

சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

நேற்று மாலை துவங்கிய பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் மற்றும் மற்றும் அணியில் இடம்பெறாமல் இருக்கும் உள்ளூர் வீரர்களுக்கும் இடையே 20 ஓவர் பயிற்சி கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ராயுடு, ரெய்னா மற்றும் முரளி விஜய் போன்ற வீரர்கள் களமிறங்கினர்.

இந்த காட்சி போட்டிக்கு முன்பாக மைதானத்தில் தோனி சிறிது நேரம் பயிற்சி எடுக்க வந்தார். அப்போது இறுதிப்போட்டிக்கு தோனி களமிறங்கினால் என்ன சத்தம் வருமோ அந்த சத்தம் நேற்றைய பயிற்சியில் ரசிகர்களிடம் இருந்து வந்தது. இதோ அந்த வீடியோ :

வரும் 23ஆம் தேதி நடைபெறஉள்ள முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 16ஆம் தேதி காலை 11 மணி அளவில் துவங்கி 12 மணிவரை நடந்தது மேலும் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஒரே கவுண்டரில் டிக்கெட் விற்பனை நடந்ததால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது மேலும் தள்ளு முள்ளுடன் டிக்கெட் விற்பனை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement