முத்துமுத்தா 2 தரமான பிளேயர்ஸ் இருந்தும் தோனி அவர்களை ஏன் இறக்கல – இப்படியே இருந்தா டீம் என்னவாகும் ?

Dhoni

இந்த வருட ஐபிஎல் தொடரில் பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி முதல் போட்டியிலேயே வெற்றி கணக்கை துவக்கிய சென்னை அணிக்கு அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி) ஆகிய அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போட்டியிலும் சென்னை அணியின் முக்கிய வீரரான ராயுடு விளையாட முடியாமல் போனது சென்னை அணிக்கு பெருத்த பின்னைடைவை தந்தது.

முதல் போட்டியில் தனியாளாக நின்று தனது சிறப்பான ஆட்டத்தை சென்னை அணிக்காக கொடுத்த ராயுடுவால் அடுத்த இரண்டு போட்டிகளில் ஆடமுடியாமல் போனது. இந்த விடயமே சென்னை அணிக்கு தோல்வியை தந்தது என்று ரசிகர்கள் பலரும் கூறிவரும் நிலையில் சென்னை அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் “பிளேஆப்” சுற்றுக்காவது முன்னேறுமா ? ஆகாதா ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பேட்டிங்கில் பலமின்றி தவிர்த்து வரும் சென்னை அணிக்கு ராயுடு வந்தால் பலம் கிடைக்கும் என்று தோனி ஒருபுறம் கூறியிருந்தாலும் ரசிகர்களும் சிஎஸ்கே அணையின் பலத்தை அதிகரிக்க பல கருத்துக்களைக் கூறிவருகின்றனர். அந்த வகையில் இளம் ஆல்-ரவுண்டராக அணியில் விளையாடி வரும் சாம் குரான் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு அளித்தாலும் அவர் அனுபவம் குறைந்தவர் என்பதால் அவருக்கு பதிலாக பிராவோவை விளையாட வைக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

Bravo

ஏற்கனவே பல தொடர்களாக சென்னை அணிக்காக விளையாடி வரும் அனுபவ வீரரான பிராவோ பேட்டிங் செய்யும் ஆற்றல் உடையவர் என்பது மட்டுமின்றி டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் பிராவோ இல்லாதது சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு. ஏனெனில் பேட்டிங்கிலும் பெரிய அளவில் அதிரடியாக விளையாடி அவரால் கை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி யு.ஏ.இ மைதானங்களில் அதிகமாக விளையாடியுள்ள இம்ரான் தாஹிர் ஏன் அணியில் சேர்க்கவில்லை என்றும் அவர் கடந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் இவர்கள் இருவரையும் அணியில் உடனே இணைத்தால் மட்டுமே சிஎஸ்கே அணி மீண்டும் பழைய பலத்தை அடையும் என்றும் கூறிவருகின்றனர்.

Tahir-2

மேலும் டாப் ஆர்டரில் பேட்ஸ்மேன்களை சரி செய்ய வேண்டும் என்று தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற இருக்கும் சன்ரைஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் சென்னை அணியில் மாற்றம் இருக்குமா ? இல்லையா ? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய சிஎஸ்கே அணி இருக்கும் சூழ்நிலை ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கும் விதமாகவே உள்ளது நிதர்சனமான உண்மை.